Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரளா சதி: வைகோ குற்ற‌ம்சா‌ற்று!

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரளா சதி: வைகோ குற்ற‌ம்சா‌ற்று!
, திங்கள், 7 ஜனவரி 2008 (11:27 IST)
முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி செய்வதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

சேல‌த்த‌ி‌ற்கு வ‌ந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌‌‌ல், முல்லை‌ப் பெரியாறு, பாலாறு பிரச்சினைகளில் தமிழக உரிமைகள் பறி போவதை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது. இந்த பிரச்சினைகளுக்காக நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம்.

சேலம் ரயில்வே கோட்டம் பெரியார் காலத்தில் இருந்தே வலியுறுத்தப்பட்டது பொள்ளாச்சி - கிணத்துகடவு இடையே 75 கிலோ மீட்டர் ரயில்வே பாதை கேரளா மாநிலத்தின் பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகம். நாங்கள் இந்த பிரச்சினையை விடப் போவதில்லை. பொள்ளாச்சி - கிணத்துகடவு ரயில் பாதையை மதுரை கோட்டத்தில் சேர்க்கும் வரை எங்களின் முயற்சி இருக்கும். அதே போல தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி போன்ற ரயில்வே பாதைகள் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளது. அவை மதுரை கோட்டத்துடன் சேர்க்கப்பட வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் நமக்கு எதிராக செயல்படும் கேரளா முதலமை‌ச்ச‌ர் அச்சுதானந்தனுடன் சமரசம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? முல்லை‌ப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. அவர்கள் புதிதாக அணை கட்டுவதாக சொல்லக் கூடிய இடம், பழைய முல்லை‌ப் பெரியாறு அணை அஸ்திவாரத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ளது. புதிய அணைக்கு வெடி வைக்கும் போது பழைய அணை உடைந்து விடும். முல்லை பெரியாறு நீர் தேக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும்.

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினையில் முக்கியமான நெல்லுக்கு ரூ.1000 விலை கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகிற 11ஆ‌ம் தேதி விவசாயிகளின் பிரச்சினையை முன் வைத்து கோவில்பட்டியில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

பா.ம.க. - தி.மு.க. இடையே உள்ள உறவு நாகரீகத்தின் எல்லையை தாண்டி விட்டது. கூட்டணியில் குழப்பம் உள்ளது. எங்கள் அணிக்கு தலைமை தாங்க கூடிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட்டணி பற்றி முடிவு செய்வார். மது ஒழிப்பு தொடர்பாக டாக்டர் ராமதாஸ் கூறிய கருத்துக்கள் வரவேற்கத்தக்கது எ‌ன்று வைகோ கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil