Newsworld News Tnnews 0801 02 1080102022_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Advertiesment
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
, புதன், 2 ஜனவரி 2008 (12:30 IST)
தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் வந்ததால் அவருக்கும் அவர் வீட்டிற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வேளாண்மை துறை அமைச்சராக இருப்பவர் வீரபாண்டி ஆறுமுகம். இவர் தி.மு.க. வின் அமைச்சரவையில் முக்கிய நபராக கருதப்படுபவர். மேலும் சேலம் மாவட்ட தி.மு.க. மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று சேலம் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் ஒரு மர்ம நபர் பேசியுள்ளார். போலீசாரை ஆபாசமாக திட்டியபின் வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் குண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்தார். உடனே அமைச்சர் வீட்டை கடுமையாக சோதனையிட்டனர். ண்டு இல்லை என்பது உறுதியானது. தொடர்ந்து அமைச்சருக்கும் அவரது வீட்டிற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil