2008ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டபேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 23ஆம் தேதி துவங்குகிறது.
ஆண்டுதோறும் ஆளுநர் உரையுடன் முதல் சட்டப் பேரவை கூட்டத்தொடர் துவங்கும். அதன் அடிப்படையில் 2008ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 23ஆம் தேதி துவங்குகிறது.
இதில் தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா உரையாற்றுகிறார். பின்னர் சுமார் 5 நாட்களுக்கு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். இதில் எதிர்க்கட்சி உள்ளிட்ட சர்வ கட்சித் தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பேசுவார்கள்.
இதனை தொடர்ந்து ஆளுநனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்து பேசுவார். இந்த கூட்டத் தொடர் ஒரு வாரம் நடைபெறும் என்று தெரிகிறது. இதில் அரசின் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறும் என்று தெரிகிறது.