Publish Date: Fri, 02 Nov 2007 (12:56 IST)
Updated Date: Fri, 02 Nov 2007 (12:56 IST)
திரைப்பட உலகின் முடிசூடா மன்னாகத் திகழ்ந்த அமரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாள் காலமானார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கமலா அம்மாள் கடந்த 31ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமலா அம்மாள் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 68.
அவரது உடலுக்கு உறவினர்களும், தமிழ் திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.