நைஜீரிய தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட மூன்று தமிழர்கள் நேற்று இரவு சொந்த ஊர் திரும்பினர்.
திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தை சேர்ந்த வினோத், அஜித், மோகன்தாஸ் ஆகியோர் நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். பின்னர் அவர்களை எண்ணெய் நிறுவனம் பணம் கொடுத்து மீட்டது.
இதையடுத்து நாடு திரும்பிய 3 பேரும் நேற்று இரவு சொந்த ஊருக்கு வந்தனர். அவர்களுக்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் மூன்று பேரும் செய்தியாளர்களிடம் கூறுகையில், நைஜீரிய தீவிரவாதிகள் ரொம்ப நல்லவர்கள். நாங்கள் கேட்டதையெல்லாம் அவர்கள் கொடுத்தார்கள். நடு காட்டில் டெண்ட் போட்டு எங்களை வைத்திருந்தனர். அரிசி உணவு கேட்டதால், அரிசியும், மண்எண்ணெய் ஸ்டவ்வும் வாங்கிக் கொடுத்தனர். மதுபான விருந்து வைத்து உபசரித்தனர். எங்களை தீவிரவாதிகள் துன்புறுத்தவில்லை என்றனர்.