Newsworld News Tnnews 0710 21 1071021016_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளாவிற்கு லாரிகளை இயக்கவேண்டாம்

-எமது ஈரோடு செய்தியாளர்

Advertiesment
கேரளாவிற்கு லாரிகளை இயக்கவேண்டாம்

Webdunia

, ஞாயிறு, 21 அக்டோபர் 2007 (16:28 IST)
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு யாரும் லாரிகளை இயக்கவேண்டாம் என தமிழக லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செங்கோடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

கேரளாவில் லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களுக்கு சேமநல நிதி உயர்த்தப்பட்டதை கண்டித்தும் அதை திரும்ப பெறக்கோரியும் கேரளாவில் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளா லாரி உரிமையாளர் போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தம் முடியும் வரை தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு யாரும் லாரிகளை இயக்கவேண்டாம் என லாரி உரிமையாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil