தமிழகத்தில் தொடரும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க கடுமையான தண்டனை விதிக்கும் சட்டம் அமுலாக்குவதே சாத்தியமாகும்.
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ரேசன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இதற்கு அடிப்படை காரணம் ரேசன் கடையில் பணியாற்றும் ஊழியர்களே ஆவர்.
பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளுக்கு தங்களுக்கு தேவையான பொருட்கள் மட்டும் பெற்று வருகின்றனர். பெரும்பாலும் வருமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மட்டுமே ரேசன் அரிசியை பெறுகின்றனர்.
ரேசன் கடையில் பெரும்பாலான ஊழியர்கள் ரேசன் அரிசியை கணக்கு காட்ட அவர்கள் மேற்கொள்ளப்படும் திட்டம் விசித்திரமானது. பொதுமக்கள் தங்கள் ரேசன் அட்டையில் தாங்கள் கேட்கும் பொருளை வாங்கிக்கொண்டு என்ன பொருள் வாங்கியதாக தங்கள் அட்டையில் பதிவு செய்கிறார்கள் என பார்பதில்லை.
இதை பயன்படுத்திக்கொள்ளும் ரேசன் கடை ஊழியர்கள் சர்க்ரை மற்றும் கோதுமை வாங்கும் பொதுமக்களின் அட்டையிலும் அரிசி வாங்கியதாகவே பதிவு செய்கின்றனர்.
இதனால் நாள்தோறும் கணக்குக்கு வராத ரேசன் அரிசியை அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட அரிசி ஆலை அதிபர்கள் வந்து எடுத்து சென்று விடுவார்கள். இந்த அரிசியை ரேசன் கடை ஊழியர்களிடம் சட்டத்திற்கு புறம்பாக கிலோ ஒன்று ரூ.3 க்கு வாங்கி செல்லும் ஆலை அதிபர்கள் இந்த அரிசியை பாலிசாக்கி கேரளாவிற்கு கொண்டு சென்று ரூ.8 முதலம் 14 வரை விற்பனை செய்கின்றனர்.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ரேசன் அரிசி கடத்தல் சாதாரணமாகி வருகிறது. இதை அதிகாரிகள் பிடித்து வழக்கு பதிவு செய்தாலும் ரேசன் அரிசி கடத்தல் குறைந்ததாக தெரியவில்லை.
இதற்கு காரணம் ரேசன் அரிசியை கடத்தும் நபர்கள் மீது கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து தண்டனை கடுமையாக்க வேண்டும். இல்லையென்றால் வருமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு வழங்கும் சலுகை கட்டண அரிசி ரேசன் கடை ஊழியர்களையும், மில் அதிபர்களையும் மட்டுமே வாழவைக்கும் என்பதில் ஐயமில்லை.