Publish Date: Sat, 20 Oct 2007 (12:39 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:32 IST)
கோவை கோட்டைமேடு பகுதியில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது!
இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த மேலும் ஒரு சடலம் இன்று காலை மீட்கப்பட்டதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.2 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என்றும், காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 அளிக்கப்படும் என்று தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.