Newsworld News Tnnews 0710 19 1071019062_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது : இருவர் பலி!

Advertiesment
அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து கோவை
கோவை மாவட்டம் முக்கடம் பகுதியில் உள்ள தமிழக அரசு வீட்டு வசதிக் குடியிருப்பு அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். மேலும் கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது!

கோவையில் தொடர்ந்து பெய்த மழையினால் 35 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு இடிந்து விழுந்ததென்று கூறப்படுகிறது.

25 வீடுகள் கொண்ட இக்குடியிருப்பு கட்டடம் மோசமான நிலையில் இருந்ததென்றும், கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் மாண்டிருக்கக் கூடும் என்றும் அஞ்சுவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

தீயணைப்புப் படையினரும், காவல் துறையினரும் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil