Publish Date: Tue, 02 Oct 2007 (15:54 IST)
Updated Date: Tue, 02 Oct 2007 (15:54 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் பெரும்பான்மையான இடங்களில் மழை பெய்யும் என்றும், சில இடங்களில் கனமழை இருக்கக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.
இதேபோல், காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.