Publish Date: Fri, 21 Sep 2007 (17:00 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:22 IST)
மதவாத சக்திகள் சேது சமுத்திர திட்டத்தை சீர் குலைக்க சதி செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் குற்றம்சாற்றியுள்ளார்.
இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முதல்வர் அவசர சட்டம் பிறப்பித்துள்ளார். முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் பாலம் தொடர்பாக வரும் 26ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
சேது கால்வாய் திட்டத்தை முடக்க மதவாத சக்திகள் சதி செய்கின்றது. அந்த திட்டத்தை அரசு கைவிடக் கூடாது. அத்திட்டத்தை விரைந்து முடிக்கக் கோரி 24ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் கூறினார்.