Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிராம நிர்வாக அதிகாரிகள் தே‌ர்வு பட்டியல் வெளியிட கோரிக்கை!

‌ஈரோடு செ‌‌ய்‌தியாள‌ர் வேலு‌‌ச்சா‌மி

கிராம நிர்வாக அதிகாரிகள் தே‌ர்வு பட்டியல் வெளியிட கோரிக்கை!

Webdunia

, வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (17:06 IST)
கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வுப்பட்டியலை சந்தேகத்துக்கு இடமின்றி உடனடியாக வெளியிட வேண்டும் என சேலத்தில் நடந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கோவை மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் கோவை மண்டல மாநாடு சேலத்தில் நடந்தது. சேலம் மாவட்ட செயலாளர் ராஜாமணி வரவேற்றார். மாநில செயலாளர் மணி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

அரசு பணியாளர் தேர்வாணையம் செப்ட‌ம்ப‌ர் 3-வது வாரத்தில் கிராம நிர்வாக நியமனம் செய்யப்படுவர் என அறிவித்தது. செப்ட‌ம்ப‌ர் 3-வது வாரம் முடியும் நிலையில், இதுவரை நியமனப்பட்டியல் வெளியாகவில்லை. அரசுப் பணியாளர் தேர்வாணைக்குழு தலைவர், வி.ஏ.ஓ.,க்கள் தேர்வுப்பட்டியலை சந்தேகத்துக்கு இடமின்றி உடனடியாக வெளியிட வேண்டுகிறோம்.

வி.ஏ.ஓ.,க்கள் ஊழலுக்கு இடமின்றி நியமனம் செய்யப்படுவர் என அறிவித்திருந்தும், ஒரு சில இடங்களில் கையூட்டு கொடுத்திருப்பதாக பரவலான செய்திகள் வெளிவருகின்றன.

அதுபோன்ற செயலில் ஈடுபட்டு பணிநியமனம் செய்ய விரும்புபவர்களையும், இடைத்தரகர்களையும் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் நலத்திட்டங்களுக்காக வி.ஏ.ஓ.,க்கள் ககி பிழியப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் விழிப்புணர்வுடன் பணியாற்றும் வி.ஏ.ஓ.,க்களுக்கு, அதிகாரிகள் உரிய மரியாதை தருவதில்லை.

மேலும், பணப்பயன் போன்ற சலுகைகளை உடனடியாக வழங்குவதில்லை. தமிழக முதல்வரை சந்திக்க, உயரதிகாரிகள் அனுமதிப்பதில்லை.

மாநாட்டுக்கு, வருவாய்த்துறை அமைச்சர் இருமுறை வருவதாக ஒப்புதல் தந்தும், மாநாடு தள்ளிப்போய்விட்டது.

இப்படி அதிகாரிகளாலும், அரசாலும் கிராம நிர்வாக அலுவலர்கள் புறக்கணிக்கப்பட்டால், எதிர்காலத்தில் சங்கம் வேறு முடிவுகள் எடுக்கும் என்பதை இந்த கூட்டம் எச்சரிக்கையாக தெரிவிக்கிறது.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சேலம் மாவட்ட தலைவர் வேணுகோபால் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் போசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சேலம் மாவட்ட பொருளாளர் காரி நன்றி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil