Publish Date: Sun, 09 Sep 2007 (13:24 IST)
Updated Date: Sun, 09 Sep 2007 (13:24 IST)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து ஒரு வாரமாக அதன் முழு கொள்ளளவான 120 அடியாகவே நீடித்து வருகிறது.
கர்நாடக மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாக கடந்த வாரம் மேட்டூர் அ ணைக்கு வரும் நீரின் அளவு பெருமளவு அதிகரித்தது. இதனால் இந்த ஆண்டில் 4வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு அளவை எட்டியது.
படிப்படியாக நீர்வரத்து குறைந்தும் தொடர்ந்து ஒரு வார காலமாக அணையின் நீர்மட்டம் 120 கன அடியாகவே நீடித்து வருகிறது.
தற்போது அணைக்கு விநாடிக்கு 20,868 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.