குறைந்த விலையில் டாப்-அப் கார்டுகளை சென்னையை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் புதுச்சேரியிலும் பி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்தியுள்ளது.
பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தில் செல்போன் டாப்-அப் கார்டுகள் குறைந்த விலையில் ரூ.10, 30 என விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். முகவரையோ சேவை மையத்தையோ அணுகலாம் என்று பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி கே.செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.