Newsworld News Tnnews 0708 31 1070831035_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக காவல்துறை இயக்குநராக பி. ராஜேந்திரன் பொறுப்பேற்றார்!

Advertiesment
தமிழக காவல்துறை இயக்குநர் டிஜிபி பி. ராஜேந்திரன் முகர்ஜி
தமிழ்நாட்டின் புதிய காவல்துறை இயக்குநராக பி. ராஜேந்திரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்!

தமிழக காவல்துறை இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த முகர்ஜி இன்று ஓய்வு பெறுவதையடுத்து பி. ராஜேந்திரன் அப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு வந்த பி. ராஜேந்திரனிடம் தனது பொறுப்புகளை முகர்ஜி ஒப்படைத்தார்.

பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன், காவல்துறையில் பணிக்கு வந்ததில் இருந்து பெரும்பாலும் தமிழகத்திலேயே பணியாற்றியதாகவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக டி.ஜி.பி. அலுவலகத்திலேயே பணியாற்றியுள்ளதாகவும் கூறினார்.

கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ராஜேந்திரன், நக்சலைட்டுகள் கண்காணிப்பு பிரிவில் பணியாற்றிய அனுபவம் தனக்கு உள்ளது என்றும், தற்பொழுது இப்பணி சிறப்பாக நடந்து வருகிறது என்றும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil