Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சவால் விட்டது எதிரிகளுக்குத்தான் : கருணாநிதி விளக்கம்!

Advertiesment
சவால் விட்டது எதிரிகளுக்குத்தான் : கருணாநிதி விளக்கம்!

Webdunia

, வியாழன், 30 ஆகஸ்ட் 2007 (17:23 IST)
திருமண விழா ஒன்றில் நான் பேசிய கருத்துக்கள் அனைத்தும் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் தானே தவிர தோழமை கொண்டோருக்கு அல்ல என்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி கூறியுள்ளார்!

இது குறித்து கேள்வி - பதிலாக அவர் விடுத்துள்ள செய்தியில், "தோழமை கொண்டோருக்கு யாரும் சவால் அல்லது மிரட்டல் விடமாட்டார்கள். துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும்தான் அறைகூவலோ, சவாலோ விடுவார்கள்" என்று கூறியுள்ளார்.

தி.மு.க. அணியை உடைக்க வேண்டுமென பாகீரத முயற்சி செய்துவரும் சில ஏடுகள், திருமணத்தில் தான் பேசியதை திரித்து வெளியிட்டு கலகம் செய்ய துடியாய்த் துடிப்பதாகவும், இப்படிப்பட்ட விஷமப் பிரச்சாரத்தில் எல்லோரும் ஏமாந்துவிட மாட்டார்கள் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

கூட்டணிக்கும், தொகுதி உடன்பாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வரதராஜன் அறிக்கையாய் வெளியிட்டுள்ளாரே என்ற கேள்விக்கு, அந்தந்தக் கட்சிகளின் சந்தர்ப்பம், வசதி, வாய்ப்புக்கு ஏற்ற வியாக்கியானம் செய்துகொண்டாலும், தொகுதி உடன்பாட்டினையும் நமது மக்கள் கூட்டணி என்றுதான் குறிப்பிடுகிறார்கள். யாரும் கூட்டணி, தொகுதி உடன்பாடு என பிரித்துப் பார்த்து புரிந்துகொள்வதில்லை என்று பதிலளித்துள்ளார்.

பா.ம.க. சார்புடைய ஒரு பத்திரிக்கை கூட்டணி இல்லை என்று தலைப்பில் கொட்டை எழுத்தில் பிரசுரித்துவிட்ட காரணத்தால், தேர்தல் உடன்பாடே இல்லை என்று பொருள் அல்ல என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil