ஈரோடு மாவட்டம் ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள அரேபாளையம் என்ற இடத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்கள்.
தீவிரவாதிகள் மற்றும் வனக்கொள்ளைகளை தடுக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடக காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள அரேபாளையத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கர்நாடகா மாநிலம் தென்பிராந்திய காவல்துறை ஐ.ஜி. பி.ஆர்.சர்மா, சாம்ராஜ்நகர் மாவட்ட காவல்துறை எஸ்.பி., பி.ஸ்ரீகண்டப்பா , சாம்ராஜ்நகர் மாவட்ட வனத்துறை அதிகாரி ராஜூ, கொள்ளேகால் மாவட்ட வனத்துறை அதிகாரி குமார், தமிழ்நாட்டின் சார்பாக கோயமுத்தூர் மண்டல போலீஸ் டி.ஐ.ஜி மஞ்சுநாதா, ஈரோடு மாவட்ட போலீஸ் எஸ்.பி. சோனல்மிஸ்ரா, அதிரடிப்படை எஸ்.பி. பொன்மாணிக்கவேல், கூடுதல் எஸ்.பி திருநாவுக்கரசு சத்தியமங்கலம் மாவட்ட வனத்துறை அதிகாரி ராமசுப்பிரமணியம் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் இருமாநில வனப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், வனப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை கடத்துவதை தடுக்கவும், வனக்கொள்ளையர்கள் வனப்பகுதிக்குள் நுழையாமல் விரட்டவும் இருமாநில அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.