Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து தினகரன் நீக்கம்!

Advertiesment
அதிமுக டி.டிவி. தினகரன் ஜெயலலிதா

Webdunia

, செவ்வாய், 28 ஆகஸ்ட் 2007 (18:41 IST)
அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து டி.டிவி. தினகரனை நீக்கியும், மேலும் பலர் பொறுப்புகளை மாற்றியும் அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்!

அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் மாற்றப்பட்டு அதிமுக பொருளாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அவைத் தலைவர் பதவியையும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பதவியையும் வகித்து வந்த மதுசூதனன் இனி அவைத் தலைவர் பதவியில் மட்டும் நீடிப்பார்.

மீனவர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து டி. ஜெயக்குமார் மாற்றப்பட்டு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அமைப்பு செயலாளராக பொறுப்பில் இருந்து மு. தம்பிதுரை நீக்கப்பட்டு, அதிமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல, சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் பி.எச். பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அவர்கள் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு முறையே அமைப்பு செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலரது பொறுப்புகளை மாற்றியும், பொறுப்புகளில் இருந்து நீக்கியும் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil