Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது!

மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது!

Webdunia

, திங்கள், 27 ஆகஸ்ட் 2007 (12:25 IST)
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்ததையடுத்து இந்த ஆண்டிலேயே மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது!

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனகாரணமாக கடந்த 24ம் தேதி வினாடிக்கு 16,465 கஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று முன்தினம் வினாடிக்கு 28,308 கஅடியாகவும், நேற்று மாலை வினாடிக்கு 35,071 கஅடியாகவும் அதிகரித்தது.

நீர்வரத்து படிப்படியாக அதிகரித்ததால் 24ம் தேதி 117.870 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று முன்தினம் 118.320 அடியாகவும், நேற்று மாலை 119.510 அடியாகவும் உயர்ந்தது. நீர் இருப்பு 92.692 டி.எம்.சி. யாக இருந்தது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்தஆண்டிலேயே மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 30ல் முதல் முறையாகவும், செப்.15ல் இரண்டாம் முறையாகவும், அக்.,17ல் மூன்றாம் முறையாகவும், நவ.,21ல் நான்காம் முறையாகவும் மேட்டூர் அணை முழு கொளளளவை எட்டி நிறைந்தது. 2006ல் ஒரு முறை ஆக.19 மட்டுமே அணை நிரம்பியது. இந்த ஆண்டில் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் முறையாகவும், ஆகஸ்ட் 8ம் தேதி இரண்டாம் முறையாகவும் நிரம்பிய மேட்டூர் அணை, இன்று மீண்டும் நிரம்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil