Publish Date: Thu, 23 Aug 2007 (18:21 IST)
Updated Date: Thu, 23 Aug 2007 (18:21 IST)
தமிழகத்தின் வட மாவடட்ங்களில் தொடர்ந்து கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்பருவ மழை தொடங்கய நாள் முதல் அவ்வப்போது சென்னையில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்றும் தமிழகத்தின் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. இதற்கிடையே மழை இன்னும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன் அறிவிப்பு செய்துள்ளது.
தற்போது சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.