Newsworld News Tnnews 0708 23 1070823009_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

25 ஆம் தேதி இரவும் ரயில் மறியல் : வீரபாண்டி ஆறுமுகம் அறிவிப்பு!

Advertiesment
வீரபாண்டி ஆறுமுகம் ரயில் மறியல் சேலம் ரயில் கோட்ட
சேலம் ரயில் கோட்டத்தை திட்டமிட்டபடி அமைக்க வேண்டும் என்று கோரி 25 ஆம் தேதி நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டம் அன்று இரவும் நடைபெறும் என்று தமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார்!

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் ரயில் கோட்டத்தை ஏற்கனவே அறிவித்தபடி செப்டம்பர் 14 ஆம் தேதி துவக்க வேண்டும் என்று வலியுறுத்தி 25 ஆம் தேதி காலை 8 மணி முதல் 26 ஆம் தேதி காலை 8 மணி வரை சேலம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்படும் என்றார்.

தமிழ்நாட்டிலிருந்து கேரளா செல்லும் ரயில்களும், கேரளத்திலிருந்து தமிழகத்திற்கும், டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நிறுத்தப்படும் என்றும் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil