Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடி தாக்கி கபாலீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் சேதம்

Advertiesment
இடி தாக்கி கபாலீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் சேதம்

Webdunia

, புதன், 22 ஆகஸ்ட் 2007 (11:21 IST)
சென்னை மைலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் இடி தாக்கியதில் சேதமடைந்தது.

சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று மாலை மின்னல் இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்பொழுது இடி தாக்கியதில் கபாலிஸ்வரர் கோயிலில் ராஜகோபுரத்தின் உச்சியில் உள்ள யாலியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இடிந்து விழுந்த கற்கள் தாக்கி 3 சிறுவர்கள் காயமுற்றனர்.

தகவலஅறிந்தஅங்கவந்த இணஆணையர் தனபால், கோபுரத்தின் உச்சிப்பகுதியான நாசித்தலையின் தெற்கு பகுதியை இடி தாக்கியுள்ளது. இதனால் சிறிய அளவுக்கு சிதைவு ஏற்பட்டுள்ளது. கோவில் வழிபாட்டுக்கு இடïறு இல்லாத வகையில், இடி தாக்கியதற்கு உடனே கோவிலில் பிராயச்சித்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து வழிபாடு நடந்து வருகிறது. நாளை (வியாழக்கிழமை) பாலாலயம் செய்யப்பட்டு ராஜகோபுரத்தின் சிதைந்த பகுதி புதுப்பிக்கப்படுமஎன்றஅவர் கூறினார்.

கோபுரத்தின் கிழக்கு பகுதியில் ஒரு சிற்பத்திற்கு சேதம் ஏற்பட்டதால் அது கீழே விழுந்து விடாமல் இருக்க கயிற்றால் கட்டப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil