Publish Date: Mon, 20 Aug 2007 (10:52 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:10 IST)
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதுடன் மீன்களையும் கொள்ளையடித்து சென்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க படகுகளில் சென்ற மீனவர்கள், நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் ராமேசுவரம் மீனவர்களை அச்சப்படுத்தும் வகையில் அவர்கள் இருந்த திசை நோக்கியும் சுட்டுள்ளனர். ஆனால் இதில் எந்த மீனவர்களுக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலும், இந்திய மீனவர்களின் படகுக்குள் இறங்கி, அதில் இருந்த மீன்களை கைப்பற்றிக்கொண்டு சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.