சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அரிய வகை கிளிகள், மயில்கள் உட்பட 76 பறவைகள் புது வரவாக சேர்க்கப்பட்டுள்ளன!காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜெமினி பறவைகள் பண்ணையில் இருந்து இந்த அரிய வகை பறவைகளை வண்டலூர் உரியியல் பூங்கா வாங்கியுள்ளது.
தற்பொழுது வாங்கப்பட்ட 76 பறவைகளில் பாராகீட் எனும், கழுத்துப் பகுதியில் மோதிர வளையத்தைப் போன்ற நிறத்துடனும், மார்புப் பகுதியில் சிவந்த நிறத்துடனும் உள்ள கிளிகளும், 3 குஞ்சுகள் உட்பட 13 உயர் வகை மயில்களும் அடங்கும்.
தற்பொழுது வாங்கப்பட்ட 13 மயில்களுடன் சேர்த்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் 39 மயில்கள் உள்ளன.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல வகை அரிய கிளிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மருத்துவர்களின் ஒரு நாள் பரிசோதனைக்குப் பின்னர் அவைகள் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று வண்டலூர் உயிரில் பூங்காவின் துணை இயக்குநர் நிஹார் ரஞ்சன் கூறினார்.