Newsworld News Tnnews 0708 17 1070817027_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தென்காசி படுகொலை : 4 பேர் கைது!

Advertiesment
தென்காசி படுகொலை
நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 14 ஆம் தேதி நடந்த மோதலில் 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

இந்த மோதலில் தொடர்புடைய இருதரப்பினரும் அளித்த புகார்களின் அடிப்படையில், படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், சேகர், செந்தில் ஆகியோரின் மூத்த சகோதரர் சக்தி பாண்டியன், அவருடைய உறவினர் மணி என்கின்ற பிஸ்தா மணி, அலாவுதீன், ஹனீஃபா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவர்கள் நால்வரையும் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதை அடுத்து, சக்தி பாண்டியன், மணி ஆகியோர் நாங்குநேரி கிளை சிறைச்சாலையிலும், அலாவுதீன் ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலில் ஹனீஃபா காயமுற்றுள்ளதால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil