Publish Date: Thu, 16 Aug 2007 (14:34 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:05 IST)
காவிரியில் நீர்வரத்து கணிசமாக குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு பாதியாக குறைக்கப்பட்டதை அடுத்து காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளம் குறையும்.
நேற்று முன்தினம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 121 அடியாகவும், அணைக்கு வந்த நீரின் அளவு நொடிக்கு 46,000 கன அடியாக இருந்ததால் அணையில் இருந்து 65,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 24,000 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டமும் 120.37 அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 36,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் 120 அடி வரைக்கும் நீரை தேக்க முடியும் என்பதால் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு மேலும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லணையில் இருந்து பாசனத்திற்காக காவிரியில் நொடிக்கு 5,28 கன அடி, வெண்ணாற்றில் 9,367கன அடியும், கல்லணைக் கால்வாயில் 3,514 கன அடியும் திறந்து விடப்படுகிறது.
(வார்த்தா)