Publish Date: Tue, 14 Aug 2007 (22:24 IST)
Updated Date: Tue, 14 Aug 2007 (22:24 IST)
தமிழ்நாடு முழுவதும் கம்பி வடத்தின் வாயிலாக தொலைக்காட்சி இணைப்புகளை வழங்க முடிவெடுத்துள்ள தமிழக அரசு அதற்கென கேபிள் டி.வி. இணைப்புக் கழகம் எனும் அமைப்பை உருவாக்கியுள்ளது!
இவ்வமைப்பு தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இவ்வமைப்பிற்கு தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலர், நிதித்துறைச் செயலர், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், தமிழக மின்வாரியத்தின் தலைவர் ஆகியோர் இயக்குநர்களாக இருப்பர். இது தொடர்பாக தமிழக அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.