புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுரை - ராமேஸ்வரம் இடையேயான அகல ரயில்பாதையில் இன்று முதல் போகுவரத்து தொடங்குகிறது. மதுரையில் நடைபெறும் இதற்கான விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரயில் போக்குவரத்து சேவையை தொடங்கி வைக்கிறார்.
மதுரை - ராமேஸ்வரம் இடையே புதிதாக அகல ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா, மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று மாலை நடக்கிறது. தமிழக முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இவ்விழாவில், ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், இணை அமைச்சர்கள் வேலு, ரத்வா, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் கருணாநிதி இன்று காலை மதுரை வந்தடைந்தார்.
விழாவையொட்டி, மதுரை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப் பட்டுள்ளது. 3,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.