Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சனிப் பெயர்ச்சி : திருநள்ளாற்றில் 5 லட்சம் பக்தர்கள் திரண்டனர்!

Advertiesment
சனிப் பெயர்ச்சி : திருநள்ளாற்றில் 5 லட்சம் பக்தர்கள் திரண்டனர்!

Webdunia

, ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2007 (20:36 IST)
சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாறு திருத்தலத்தில் இன்று 5 லட்சம் பக்தர்கள் திரண்டு சன் பகவானை எள் விளக்கேற்றி வழிபட்டனர்!

சனி பகவான் இன்று கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்கிறார். இதனையொட்டி திருநள்ளாற்றில் உள்ள தர்பாரேன்யஸ்வரர் திருக்கோயில் உள்ள சனி பகவானின் சன்னதிக்குச் சென்று வழிபட அதிகாலை முதலே லட்சக் கணக்கான பக்தர்கள் வந்தனர்.

அங்குள்ள தீர்த்தங்களில் நீராடிவிட சனி பகவானை வழிபட்டனர். பக்தர்களை சமாளிக்க புதுச்சேரி அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. பாதுகாப்புப் பணியில் 1,500 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நள தீர்த்தத்தில் நீராடி பழைய ஆடைகளை அங்கேயே விட்டுவிட்டு ஈரத் துணியுடன் பக்தர்கள் சனீஸ்வரரை வழிபட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil