Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச பயணச் சீட்டு : தமிழக அரசு!

கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச பயணச் சீட்டு : தமிழக அரசு!

Webdunia

, ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2007 (16:03 IST)
அரசு மருத்துவமனைகளுக்கும், ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச பயணச் சீட்டு வழங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்!

பேறு காலம் மற்றும் குழந்தைகள் நலத் திட்டத்தை துவக்கி வைத்தபின் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச பயணச் சீட்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தபபட்டுள்ளதாகவும், மேலும் பிரவச நேரத்தில் 1056 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் வந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் என்றும் கூறியுள்ளார்.

பிரசவத்திற்குப் பின்னரும் வீடு திரும்புவதற்கு இந்த ஆம்புலன்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இந்த ஆம்புலன்ஸ் சேவை இலவசமானது என்று கூறிய அமைச்சர், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தொண்டு நிறுவனங்களால் இந்த ஆம்புலன்ஸ்கள் பராமரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil