Publish Date: Sat, 04 Aug 2007 (09:44 IST)
Updated Date: Sat, 04 Aug 2007 (09:44 IST)
இராமேஷ்வரம் - மானாமதுரை இடையேயான அகல ரயில்பாதை மாற்றப்பட்டிருக்கிறது. பாம்பன் பாலத்தை உள்ளடக்கிய இந்த அகலப்பாதையில் ரயில் போக்குவரத்து இந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கப்படுகிறது.
மண்டபத்திலிருந்து இராமேஷ்வரம் வரையில் கடலின் குறுக்கே பாம்பன் பாலம் அமைந்துள்ளது. 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாலத்தில் 1914 ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இந்த வழியாக கப்பல்கள் செல்லும் போது பாம்பன் பாலம் இரண்டாகப் பிரிந்து உயர்ந்து வழி விடும். கப்பல்கள் சென்றவுடன் இணைந்து ரயில் பாதையாக செயல்படும். மானமதுரை - இராமமேஷ்வரம் அகல ரயில் பாதை திட்டத்திற்கு ரூ 200 கோடி செலவிடப்பட்டிருந்தது.
இதில் ரூ24 கோடி பாம்பன் பாலத்திற்கு செலவிடப்பட்டிருந்தது. புதுப்பிக்கப்பட்ட அகல ரயில்பாதையில் மதுரை வழியாக செல்லும் தொடர் வண்டி சென்னையில் இருந்து இராமேஷ்வரத்திற்கு செல்கிறது.
இந்த அகல ரயில்பாதை போக்குவரத்து இம்மாதம் 12 ஆம் தொடங்கப்படுகிறது. இதற்கான விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் கருணாநிதி, ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.