Newsworld News Tnnews 0708 01 1070801039_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளை ரவி என்கவுண்டரில் பலி!

Advertiesment
வெள்ளை ரவி என்கவுண்டர்
வட சென்னையில் நீண்டகாலமாக அச்சுறுத்தலாகத் திகழ்ந்த பிரபல குற்றவாளி வெள்ளை ரவி காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டான்!

வெள்ளை ரவியை பிடிக்க காவல் துறையினர் நீண்டகாலமாக தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்த நிலையில், ஓசூர் அருகே அவன் பதுங்கியிருந்த வீட்டை காவல் துறையினர் சுற்றி வளைத்தபோது, அவர்களை வெள்ளை ரவி தாக்க முற்பட்டதாகவும், தற்காப்பிற்காக காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவன் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக வெள்ளை ரவி தலைமறைவாக இருந்தாலும், தனது ஆட்களைப் பயன்படுத்தி மிரட்டிப் பணம் பறித்தல், ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றில் ஈடுபட்டு வந்ததாக பல புகார்கள் வந்துள்ளன.

இந்த நிலையில், வெள்ளை ரவியை காவல் துறையினர் தேடிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil