Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலைகவசம் அணியாதவர்களுக்கு அபராதம் :மக்கள் அதிருப்தி

தலைகவசம் அணியாதவர்களுக்கு அபராதம் :மக்கள் அதிருப்தி

Webdunia

, சனி, 21 ஜூலை 2007 (12:26 IST)
இருசக்கர வாகனத்தில் தலைகவசம்( ஹெல்மெட்) அணியாமல் சென்றவர்கள் மீது ஈரோடு மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் எடுத்து வரும் திடீர் நடவடிக்கையால் பொதுமக்கள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகினர்.

தமிழகத்தில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்களில் சிக்கும் போது தலைக் காயம் மூலமே உயிர் பலி அதிகமாகிறது. இதை தடுக்க, "இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். அதுவும் ஐ.எஸ்.ஐ., தரம் வாய்ந்த தலைக்கவசம் அணிய வேண்டும்' என அரசு அறிவித்தது. தமிழகம் முழுவதும் தலைக்கவசம் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

சட்டம் அமலான முதல் நாளே சென்னையில் 4 ஆயிரத்து 500 பேருக்கு மேல் பிடிபட்டனர். பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் முதல்வருக்கு சென்றதால், அன்று இரவே கட்டாய தலைக்கவசம் சட்டம் தளர்த்தப்பட்டது. தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களை கட்டாயப்படுத்தி அபராதம் விதிக்க வேண்டாம். அவர்களை அழைத்து அறிவுரை கூறி அனுப்பலாம்' என அரசு உத்தரவிட்டது.

இதனால் பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணியாமல்தான் சென்று வருகின்றனர்.
பெரிய கடைகளில் ஹெல்மெட் விற்பனை சரிந்தது. நேற்று முன்தினம் திடீரென ஈரோடு மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை போலீஸார் பிடிக்க ஆரம்பித்தனர். ஒரே நாளில் 250க்கும் மேற்பட்ட இருகர வாகன ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், வெள்ளகோவில் உட்பட பல்வேறு நகரங்களிலும் நேற்றும் இந்த சோதனை தொடர்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் பெரும்பாலும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதே இல்லை. பலரிடம் டிரைவிங் லைசென்ஸ் கூட இல்லை.

இரவு நேரம் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களும் அதிகரித்து வருகின்றனர்.அப்பட்டமாக நடக்கும் இந்த விதிமீறல்களை மாவட்ட போலீஸ் நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. அன்றாட இரவு ரோந்து பணியில் ஏற்பட்டுள்ள தொய்வால், மாவட்டத்தில் கொள்ளை சம்பவங்கள் பெரிய அளவில் நடந்து வருகின்றன.

இதை விட்டுவிட்டு, திடீரென வாகன ஓட்டுனர்களை பிடித்து வழக்கு பதிவு செய்வது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எஸ்.பி., சோனல் மிஸ்ரா கூறியதாவது:தமிழகம் முழுவதும் நேற்று தலைக்கவசம் அணியாதவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்ய அரசு உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 289 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசு தலைக்கவசம் அணியவேண்டும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளதால் தேவைப்படும் போது ஆய்வு செய்து வழக்கு தொடர்வோம் என்றார். சத்தியமங்கலத்தில் பிடிபட்ட் பத்து பேர் சத்தியமங்கலம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ராமநாதன் ஒவ்வொறுவருக்கும் தலா ரூ.50 அபராதம் விதித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil