Newsworld News Tnnews 0705 21 1070521042_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலைஞர் டி.வி. : ராஜ் டி.வி.யின் புதிய தொலைக்காட்சி!

Advertiesment
கலைஞர் தொலைக்காட்சி ராஜ் டிவி கருணாநிதி

Webdunia

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆதரவுடன் கலைஞர் டிவி. என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்பட இருப்பதாக ராஜ் தொலைக்காட்சியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது!

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், முதலமைச்சர் கருணாநிதியை பொதுவாக அனைவரும் கலைஞர் என்று அழைப்பதால் தாங்கள் தொடங்கும் புதிய தொலைக்காட்சிக்கு கலைஞர் டி.வி. என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்தார்.

கலைஞர் பெயரில் தொலைக்காட்சி தொடங்க முதலமைசசர் கருணாநிதியிடம் ராஜ் தொலைக்காட்சி நிர்வாகம் அனுமதி பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். கலைஞர் டி.வி. தி.மு.க. ஆதரவு தொலைக்காட்சியாக இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் புதிய தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் எல்லாம் சன் டி.வி.யை போன்று இருக்கும் என்றார்.

கலைஞர் டி.வி. அண்றாட செய்திகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை கொண்ட தொலைக்காட்சியாக இருக்கும் என்று கூறிய ராஜேந்திரன் விரைவில் கலைஞர் டி.வி. தனது ஒளிபரப்பை தொடங்கும் என கூறினார்.

கலைஞர் டி.வி.யின் வணிக முத்திரை தி.மு.க.வின் தேர்தல் சின்னமான உதயசூரியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil