Newsworld News Sports 0801 09 1080109018_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பக்னர் ஓய்வு பெறுவது நல்லது: டிக்கி பேர்ட்!

Advertiesment
சிட்னி டெஸ்‌‌‌ட் முன்னாள் கிரிக்கெட் நடுவர் டிக்கி பேர்ட் ஸ்டீவ் பக்னர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் இணையதள‌ம்
, புதன், 9 ஜனவரி 2008 (18:01 IST)
சிட்னி டெஸ்டில் நடுவர்கள் செய்த தவறு பெரும் கண்டனத்திற்குள்ளான வேளையில் முன்னாள் கிரிக்கெட் நடுவர் டிக்கி பேர்ட் இது பற்றி கூறுகையில், ஸ்டீவ் பக்னர் ஓய்வு அறிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று ஸ்கை ஸ்போர்ட்ஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஒரு முறை ஸ்டீவ் பக்னரிடம் நல்ல பெயர் உள்ளபோதே ஓய்வு பெற்று விடுவது சிறந்தது என்று தான் கூறியதாக டிக்கி பேர்ட் தெரிவித்தார்.

ஸ்டீவ் பக்னரின் தீர்ப்புகளால் இந்திய அணி பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளது என்பது உண்மையே. ஒரு நடுவர் சரியான படி நடந்துகொள்ளவில்லை என்பதைக் கூற அவர்களுக்கு உரிமை உண்டு.

ஆனால் ஒரு தொடருக்கு நடுவர் இவர்தான் என்று தீர்மானிக்கப்பட்டு விட்டால், அவர்தான் தொடரவேண்டும். ஆனால் இம்முறை அது நடக்கவில்லை. எந்த நடுவரும் விளையாடும் இரண்டு அணிகளின் மரியாதையை பெற்றிருப்பது அவசியம். பக்னர் நீண்ட காலத்திற்கு நடுவர் பணியை செய்து வருகிறார், இது சற்று அதிகம்தான், அவர் ஓய்வு பெறுவதே சிறந்தது எ‌ன்று கூறியுள்ளார் டிக்கி பேர்ட்.

Share this Story:

Follow Webdunia tamil