சிட்னி டெஸ்ட்யில் இந்தியா வீரர்களுக்கு தவறான தீர்ப்பு வழங்கிய நடுவர் ஸ்டீவ் பக்னர் பெர்த்தில் நடைபெறும் 3வது டெஸ்ட்டியில் நடுவராக இருக்க மாட்டார் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிட்னியில் நடந்த இந்தியா-ஆஸ்ட்ரேலியா 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக நடுவர் ஸ்டீவ் பக்னர் மீது தொடர் புகார்கள் எழுந்தன.
மேலும் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்குக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் தடைவிதித்ததையும் எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் அப்பீல் மனு செய்துள்ளது.
இந்த நிலையில் இந்திய வீரர்கள் அடுத்து நடக்க உள்ள பெர்த் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வகையில் நடுவர் ஸ்டீவ் பக்னரை நீக்கி சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) உத்தரவிட்டுள்ளது.
இந்திய-ஆஸ்ட்ரேலியா டெஸ்ட் தொடர்களில் நடுவர் ஸ்டீவ் பக்னருக்கு பதிலாக நியூ ஸீலாந்தை சேர்ந்த பில்லி பெளடன் நடுவராக இருப்பார் என்று சர்வதேச கிரிக்கெட் வாரிய தலைவர் மால்கம் ஸ்பீட் அறிவித்துள்ளார்.
மேலும், பக்னர் சர்வதேச கிரிக்கெட் நடுவராக தொடர்ந்து இருப்பார் என்று நம்புகிறோம் என்று கூறிய மால்கம், தற்போது சூழ்நிலையில் பதற்றம் குறைவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.