Newsworld News Sports 0801 07 1080107005_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 டெ‌ஸ்‌ட்டி‌‌ல் ஆட ஹர்பஜன்சிங்குக்கு ஐ‌சி‌சி தடை!

Advertiesment
சைம‌‌ன்ட்‌ஸ் ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌ட் பேரவை 3 டெஸ்‌ட் சிட்னி 2-வது டெஸ்‌ட்
, திங்கள், 7 ஜனவரி 2008 (19:25 IST)
சைம‌‌ன்ட்சை இனவெறியுடன் திட்டியதாக கூறப்படும் புகாரில் ஹர்பஜன்சிங்குக்கு 3 டெஸ்டில் விளையாட ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌ட் பேரவை (ஐ.சி.சி.) தடை விதித்துள்ளது.

இந்தியா-ஆஸ்‌ட்ரேலியா அணிகள் இடையே சிட்னியில் நடந்த 2-வது டெஸ்டின் 3-வது நாளில் இந்திய வீரர் ஹர்பஜன்சிங்குக்கும், ஆஸ்‌ட்ரேலியா வ‌ீர‌ர் சைம‌ன்ட்சுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தன்னை இனவெறியுடன் ஹர்பஜன்சிங் திட்டியதாக சைம‌ன்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் பேரவை‌யி‌‌ன் போட்டி நடுவர் மைக் பிராக்டரிடம் புகார் செய்தார். இது குறித்து நேற்று 5-ம் நாள் ஆட்டம் முடிந்ததும் போட்டி நடுவர் மைக் பிராக்டர் முன்னிலையில் விசாரணை துவங்கியது.

விசாரணையின் போது, ஆஸ்‌ட்ரேலிய தரப்பில் அ‌ணி‌த் தலைவ‌ர் ா‌ன்டிங், கில்கிறிஸ்ட், ஹைடென், மைக்கேல் கிளார்க், சைம‌‌ன்ட்ஸ் மற்றும் அணி மானேஜர் ஸ்டீவ் பெர்னட் ஆகியோரும், இந்திய தரப்பில் ஹர்பஜன்சிங், ெண்டுல்கர், அ‌னி‌ல் கும்ளே மற்றும் அணியின் மானேஜர் சேட்டன் சவுகான் ஆகியோரும் ஆஜராகி, சம்பவம் தொடர்பான தங்களது விளக்கத்தை அளித்தனர். அ‌ப்போது ஹ‌ர்பஜ‌ன் ச‌ி‌ங், சைம‌ன்ட்ஸ் கூறிய குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். சாதாரண முறையிலேயே அவரிடம் பேசினேன் என்று ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சுமா‌ர் ஆறரை மணி நேரம் விசாரணை‌‌க்கு ‌பி‌ன்ன‌ர் தீர்ப்பு கூற‌ப்ப‌ட்டது. இதன்படி ஹர்பஜன்சிங்குக்கு 3 டெஸ்டில் விளையாட ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌ட் பேரவை தடை விதித்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் அப்பீல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ‌ந்த ‌தீ‌ர்‌ப்பை எ‌தி‌ர்‌த்து இந்திய கிரிக்கெட் ச‌ம்மேளன‌ம் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளது. அப்பீல் செய்யப்படுவதால், அப்பீல் விசாரணை முடியும் வரை ஹர்பஜன்சிங் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கலாம். எனவே அடுத்த 2 டெஸ்டில் ஹர்பஜன்சிங் விளையாடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது.

இ‌ந்‌திய‌ர்களை இ‌ழிவு‌ப்படு‌த்து‌ம் வகை‌யி‌ல் பே‌சியதாக ஆஸ்‌ட்ரேலிய சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் மீது இந்திய தரப்பில் கூற‌ப்ப‌ட்ட புகார் ‌மீது இன்று விசாரணை நட‌‌க்‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil