ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் அனுமதியின்றி நுழைந்ததாக கூறி சானியா மீது தொடரப்பட்ட வழக்கு கைவிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதிக்குள் அனுமதியின்றி நடந்த விளம்பர படத்தில் சானியா மிர்சா நடித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமிட்டுமின்றி சானியா மீது மசூதி நிர்வாகிகள் வழங்குத் தொடர்ந்தனர்.
இதையடுத்து, மசூதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக சானியா மிர்சா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். ஆனாலும் அவர் மீதான வழக்கு கைவிடப்படவில்லை.
இந்த நிலையில், மசூதி நிர்வாகிகள் சானியா மீதான வழக்கை திரும்ப பெறுவதாக கடிதம் எழுதியிருப்பதாகவும், இது குறித்து அவர்களிடம் சில விளக்கங்கள் கோரப்பட்டிருப்பதாகவும் ஹைதராபாத் காவல்துறை உதவி ஆணையர் ரெட்டண்ணா கூறியுள்ளார்.