குஜராத் கலவரம் குறித்து குற்ற உணர்வு இல்லை - நரேந்திர மோடி!
Publish Date: Thu, 27 Mar 2014 (09:54 IST)
Updated Date: Thu, 27 Mar 2014 (09:44 IST)
2002
ஆம் ஆண்டு நடந்த பயங்கர குஜராத் கலவரத்திற்காக வருத்தப்படுவதாகக் கூறிய நரேந்திர மோடி, தனக்கு அதனால் குற்ற உணர்வு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
பிரிட்டன் எழுத்தாளரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ஆண்டி மெரினோ, நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து நூல் வெளியிட்டுள்ளார்.
அந்த நூலில் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: குஜராத் கலவரத்திற்காக வருத்தப்படுகிறேன், ஆனால் குற்ற உணர்வால் பாதிக்கப்படவில்லை. நான் குற்றவாளி என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை. என்று தெரிவித்துள்ளார்.