Newsworld News National 1403 25 1140325043_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பில்லி சூனியம் வைத்ததாக சந்தேகித்து வயதான தம்பதியர் வெட்டிக் கொலை

Advertiesment
இந்தியா
, செவ்வாய், 25 மார்ச் 2014 (17:57 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் பில்லி சூனியம் வைத்ததாக சந்தேகித்து வயதான பழங்குடியின தம்பதியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
FILE

ஜார்கண்ட் மாநிலத்தில் குந்தி மாவட்டத்தின் குட்லம் பகுதியை சேர்ந்தவர் 65 வயதான ஜஸ்வா ஹரென். பழங்குடியினத்தை சேர்ந்த இவர், தனது மனைவி பசந்தியுடன் சேர்ந்து பில்லி, சூனியம் போன்ற சித்து வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் சந்தேகித்தனர்.

webdunia
FILE
இந்நிலையில், குந்தி மாவட்டத்தில் உள்ள பிகாடன் ரெயில்வே கேட் அருகில் சரமாரியான வெட்டுக் காயங்களுடன் 2 சடலங்கள் கிடப்பதாக மாவட்ட காவலருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து, விரைந்து சென்ற காவலர்கள், ஜஸ்வா ஹரென் மற்றும் பசந்தியின் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களின் உடல் முழுவதும் சரமாரியான வெட்டுக் காயங்கள் காணப்பட்டதால், பில்லி சூனியம் வைத்ததாக சந்தேகித்து கிராம மக்கள் இவர்களை கொன்றிருக்கக் கூடும் என காவலர்கள் தெரிவித்தனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil