Newsworld News National 1403 18 1140318013_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20,000 ரூபாய் விருந்தில் கெஜ்ரிவாலிடம் சரமாரி கேள்விகள் கேட்ட விருந்தினர்கள்

Advertiesment
இந்தியா
, செவ்வாய், 18 மார்ச் 2014 (12:04 IST)
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி திரட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பாக ஏற்பாடு செய்யபட்டிருந்த 20,000 ரூபாய் விருந்தில் சுமார் 200 பேர் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
FILE

ஆம் ஆத்மி கட்சி, தேர்தல் நிதி திரட்டுவதற்காக பெங்களூருவில் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்த விருந்தில் தலா 20,000 ரூபாய் செலுத்தி பங்கேற்கும் நபர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் உரையாடியபடியே உணவருந்த வாய்ப்பளிக்கப்பட்டது.

பெங்களூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற இந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலர் கெஜ்ரிவால் ஏன் டெல்லி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினாரென கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஜன் லோக்பால் மசோதா நிறைவேறாதது தான் காரணமென தெரிவித்த கெஜ்ரிவால், ஊடகம், மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான விருந்தாளிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
webdunia
FILE

இந்த விருந்தில் சைவ மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்ட நிலையில், மதுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.விருந்தில் பங்கேற்ற பலருக்கும் இந்த விருந்து முறை திருப்தி அளித்த போதிலும், சிலர் இந்த விருந்தில் புதிதாக எந்த அம்சமும் இல்லையென தெரிவித்தனர்.

20,000 ரூபாய் விருந்தில் பங்கேற்ற நபர்களுக்கு அளிக்கப்பட்ட உணவின் விலை 650 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil