டெபாசிட் இழந்தால் கெஜ்ரிவால் அரசியலை விட்டு வெளியேறுவதாக உறுதி அளிக்கவேண்டும் - பாபா ராம்தேவ்
Publish Date: Mon, 17 Mar 2014 (11:39 IST)
Updated Date: Mon, 17 Mar 2014 (11:38 IST)
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிட தயாரென பேசும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெபாசிட்டை இழந்தால் அரசியலை விட்டு வெளியேற தயாரா என பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பிரதமர் பதவியை அடைய அவசரம் காட்டுவதாக கூறிய பாபா ராம்தேவ் அவர் சற்று நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட தயாரென ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தது குறித்து பேசிய பாபா ராம்தேவ், கெஜ்ரிவால் வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியி்ட்டு டெபாசிட்டை இழந்தால் அரசியலை விட்டு விலகுவதாக உறுதி அளிக்க வேண்டும்.