Newsworld News National 1403 17 1140317011_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 2 மணி நேரம் அதிகரிப்பு - தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு

Advertiesment
இந்தியா
, திங்கள், 17 மார்ச் 2014 (11:12 IST)
நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு 2 மணி நேரம் அதிகரிப்பட்டு, காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
FILE

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 7 ஆம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஓரே கட்டமாக ஏப்ரல் 24 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே இதற்கான அறிவிப்பை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையம், நாடு முழுவதிலும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

கடுமையான வெயில் மற்றும் சூரியன் உதயம், அஸ்தமன நேரத்தை கணக்கில் கொண்டு வாக்குப்பதிவுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத், மற்ற இரு ஆணையர்களான பிரம்மா, நசீம் சைதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து பொதுவாக அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவை 2 மணி நேரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு மணி நேரம் முன்னதாக, அதாவது காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறும். வடகிழக்கு மாநிலங்களில், காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

அதே நேரத்தில் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும். இதேபோல் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் குறிப்பிட்ட சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய சட்டசபைகளுக்கும் தமிழகம் உள்ளிட்ட சில மாநில சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கும் புதிய வாக்குப்பதிவு நேரம் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil