ஜிலேபிக்காக கடை ஊழியரை தலையிலேயே சுட்ட கொடூரம்
, புதன், 19 பிப்ரவரி 2014 (15:03 IST)
டெல்லியில் ஒரு இனிப்பு கடைக்கு சென்ற காவலாளி ஒருவர் கடை ஊழியரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய டெல்லியில் உள்ள கோலே மார்க்கெட் பகுதியில் உள்ள இனிப்பகத்திற்கு நிரஜ் குமார் என்பவர் வந்துள்ளார். இவர் ஒரு செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.இனிப்பகத்திற்கு சென்ற நிரஜ் குமார் வரிசையில் நிற்காமல், முன்னே சென்று ஜிலேபி ஆர்டர் செய்துள்ளார். இதானல் வரிசையில் நின்றவர்களுக்கும் நிரஜ் குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றியப்போது அங்கு வந்த கடை ஊழியர் சடேந்தர் சிங், நிரஜ் குமாரிடம் வரிசையில் வர சொன்னதால் கோபமடைந்த நிரஜ் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கடை ஊழியரை தலையில் சுட்டார். இச்சம்பவம் அங்கு இருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்த்த பொதுமக்கள் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் நிரேஜ் குமாரை கைது செய்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.