காந்தி பெயரை போலியாகப் பயன்படுத்தும் சோனியா காந்தி
, புதன், 19 பிப்ரவரி 2014 (11:41 IST)
''
காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுலும், ‘காந்தி’ என்ற பெயரை போலியாக வைத்து கொண்டுள்ளனர்'' என்று பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம், தாவண்கெரேவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், மோடி பேசியதாவது-'
நாடாளுமன்றத்தில், ஊழலுக்கு எதிரான மசோதாக்கள் நிறைவேறாததற்கு, பா.ஜ.க. தான் காரணம்' என, காங்கிரசார் சொல்லி திரிகின்றனர். நாடாளுமன்றத்தில், காங்கிரஸ், எம்,பி.,க்கள் தான் அமளியில் ஈடுபடுகின்றனர். இதை மக்கள் அறிந்துள்ளனர்.மக்களின் கண்களை தூசியால் மறைத்து வந்த காங்கிரஸ், இப்போது, 'பெப்பர் ஸ்பிரே' என்ற மிளகு பொடி தூவி மறைக்க பார்க்கிறது. காங்., கட்சி தான், அனைத்து ஊழல்களுக்கும் மூலகாரணம். ஊழலும், காங்கிரசும், இரட்டை சகோதரிகள். காங்கிரசை ஆட்சியில் இருந்து நீக்கினால் தான் ஊழலை ஒழிக்க முடியும். காங்கிரஸ் ஒரு தொற்று நோய் போன்றது; நாடு முழுவதும் பரவி, நாட்டை அழித்துவிட்டது. நாட்டின் அதிகாரம், ஒரே குடும்பத்தில் முடங்கிக் கிடக்கிறது.