இந்திய அரசு அண்மையில் ஏற்படுத்திய பன்முக அடையாள அட்டை வழங்கும் ஆணையம் விவரங்கள், சேர்க்கை மற்றும் ஆய்வுப் பணிகள் உள்ளடக்கிய மையமாக விளங்கும் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
இந்த ஆணையம் வெளியிடும் தனித்துவம் வாய்ந்த பன்முக அடையாள அட்டைகள் 12 முதல் 18 மாதத்திற்குள் வெளியிடப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.120 கோடி வழங்க வகை செய்யப்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிரணாப் தெரிவித்தார்.
மக்கள் பணி சிறப்படையும் பொருட்டு மேற்கொள்ளும் ஆட்சிப் பணி மேம்படுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகும் இது.
தனியார்த் துறை வல்லுநர்களை இணைத்து செயல்படுத்தப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் இது ஒரு புதிய அத்தியாயமாகும் எனவும் பிரணாப் கூறினார்.