சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மேம்பாட்டிற்காக ரூ.16,680 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக, நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
2009-10 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,
பொருளாதார மேம்பாட்டு வேகத்தை அதிகரிக்கவும், பிராந்தியங்களுக்கிடையே வேறுபாட்டை போக்கவும், சாலைகளை மேம்படுத்தவும், அவற்றை உரிய முறையில் பராமரிக்கவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அத்தியாவசியமான சாலைத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. 2009-10 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம் :
மாநிலங்களுக்கான ஒதுக்கீடு ரூ.1988.55 கோடி
மாநிலங்களுக்கிடையிலான மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளுக்கான ஒதுக்கீடு ரூ.213.97 கோடி.
யூனியன் பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு ரூ.81.51 கோடி.
மாநிலங்களுக்கிடையிலான மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளுக்கான ஒதுக்கீடு ரூ.16.03 கோடி.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முதலீடு ரூ.8,578.45 கோடி.
ரயில்வே துறைக்கு ரூ.958.36 கோடி.
கிராமப்புற சாலகளுக்கு ரூ.4,843.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரணாப் கூறினார்.