கடலோர மாநிலங்கள் 9, யூனியன் பிரதேசங்கள் 4 ஆகியவற்றில் கடற்கரைகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பல்நோக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் முதல் கடற்கரைக் காவல் நிலையத்தை நீண்டகரா அருகில் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிதம்பரம், கடற்கரைகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பல்நோக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு 2009 ஆண்டுக்குள் முடிக்கப்படும். நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, முன்பே திட்டமிட்டபடி 2011இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பிறகு வழங்கப்படும் என்றார்.
கடல் வழியாக வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்களைச் சமாளிக்க உள்ளூர் மக்களின், குறிப்பாக மீனவர்களின் ஒத்துழைப்பு தேவை. நமது நாடு முழுதும் உள்ள கடற்கரையோர கிராமங்களில் கடலோரக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.