Publish Date: Mon, 09 Feb 2009 (19:15 IST)
Updated Date: Mon, 09 Feb 2009 (19:14 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் பாகிஸ்தான் மண்ணில்தான் திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இதுகுறித்து இந்தியா கொடுத்துள்ள ஆதாரங்களுக்கான பாகிஸ்தானின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்துக் கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் பாகிஸ்தான் மண்ணில்தான் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதற்கான ஆதாரங்களை நாம் நூற்றுக்கும் அதிகமான நாடுகளுக்குக் கொடுத்துள்ளோம். அதன்மீது யாரும் எந்தச் சந்தேகத்தையும் எழுப்பவில்லை" என்றார்.
மேலும், இந்தியா கொடுத்துள்ள ஆதாரங்களுக்கான பாகிஸ்தானின் பதிலை எதிர்பார்த்து மத்திய அரசு காத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
நமது நாட்டின் முக்கியமான அணைகளை பயங்கரவாதிகள் தாக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்துக் கேட்டதற்கு, மத்திய அரசின் கவனத்திற்கு வரும் புலனாய்வு, உளவுத் தகவல்களை மாநில அரசுகளுடன் நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சிதம்பரம்.
Webdunia
Publish Date: Mon, 09 Feb 2009 (19:15 IST)
Updated Date: Mon, 09 Feb 2009 (19:14 IST)