கோத்ரா இரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்துள்ள கலவரங்கள் தொடர்பாக காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோத்ரா இரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கலவரங்களின்போது, வன்முறையாளர்களின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாற்றின் பேரில், வால்சாத் சரகக் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எர்டா கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையான விசாரணைகளுக்குப் பிறகு, ஆதாரங்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்தது.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எர்டா-வை வருகிற 13ஆம் தேதி வரை காவல்துறைக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.